தமிழ் புத்தாண்டுக்கு முன் தேர்தல் சாத்தியமில்லை - தேர்தல் ஆணைக்குழு



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது.

தேர்தல் ஆணைக்குழு ஏப்ரல் நடுப்பகுதியில் – தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகளை நிராகரிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் திறைசேரி தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவித்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

எனவே, 2023 ஏப்ரல் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவால் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமா இல்லையா என உத்தரவாதம் அளிக்க முடியாது.

திறைசேரி அதிகாரபூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதியை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது.

இல்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்.

தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை.

திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பை 25 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் நாளை அல்லது வியாழக்கிழமை வெளியிட தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்யும் என நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை