மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்!



மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழாவும் உணவு செய்முறை கண்காட்சியும் இன்று(08-03-2023)  வெல்லாவெளி கலைமகள்
மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி தலைமையில் கண்காட்சியும் மகளிர் தின விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் வன்னிக்கோப் அமைப்பின் பணிப்பாளர்களான ரஞ்சன் சிவஞானசுந்தரம், ரேணுகா சிவஞானசுந்தரம், டொக்டர் மாலதி வரன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண்களினால் கூட்டாக முன்னெடுக்கப்படும் உற்பத்திகள் மற்றும் ஏனைய உணவு செய்முறை பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றனர்.
புதியது பழையவை