மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியானது நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் வித்தியாலய அதிபர் திருமதி. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்விற்கு, பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் கலந்துகொண்டார்.
மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.