நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை