அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள - புடவைக் கடை தீப்பற்றி எரிந்து சேதம்!



அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள புடவைக் கடை ஒன்று இன்று (23) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கடையை வழமையாக நேற்று இரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில் சம்பவ தினமான இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொது மக்கள் அவதானித்ததை அடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து தீயணைக்கும் படை மற்றும் பொலிசார், இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மேல் மாடியை கொண்ட கடை தொகுதி முற்றாக ஏரிந்துள்ளதுடன் சுமார் 5 கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை வருகின்றனர்.
புதியது பழையவை