தமிழர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த காவல்துறையினர் கைது!கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் கஞ்சா விற்க முயன்ற இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு காவல்துறையினரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான நால்வர் கஞ்சா பொதியினை பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.

இதன் போது, குறித்த இரு காவல்துறையினரும் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை