சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான ஜனாதிபதி விருதினை காத்தான்குடியைச்சேர்ந்த திருமதி பாத்திமா பஹீமா சுக்ரியும் பெற்றுக்கொண்டார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால், "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் ஜானாதிபதியின் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள Waters Edge Hotel இல் (8) புதன்கிழமை நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் பலர் இதில் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான கௌரவ விருதை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த திருமதி பாத்திமா பஹீமா சுக்ரியும் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பங்குபற்றுவதற்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி இணைப்பாளர்கள் ஆகியோர் ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கது.