மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிகிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் மற்றும் இந்திய அரசின் நிதியுதவில் நிர்மாணிக்கப்படும் கேட்போர் கூடத்தை விரைவில் நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் சந்தித்தார்.


சந்திப்பின்போது, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.


கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரால், பொறியியல் பீடம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கான கேட்போர் கூட நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.


துணைவேந்தரின் கோரிக்கைக்கு அமைய இவற்றை விரைவாக அமைத்துக்கொடுக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டார்.


மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி, நெல்லிற்கான விலை நிர்ணயம் மற்றும் உர மானியம் ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதியது பழையவை