வென்னப்புவ - பேரகஸ்ஹந்திய வீதியில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
தங்கச் சங்கிலியை திருடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக நேற்று(29-03-2023) மாலை 03.00 மணியளவில் மாரவில பொலிஸார் சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
கைது நடவடிக்கையின் போது அந்நபர் பொலிஸாரை வாளால் தாக்கியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது, காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.