பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் அசோக ரன்வல குறிப்பிட்டுள்ளார்.