மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள, திருமந்திர அரண்மனை நேற்று மாலை
சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்துக்களின் தெய்வீக நூலாக திருமந்திரம் கருதப்படுகின்றது.
திருமந்திரத்தில் 3 ஆயிரம் பாடல்கள் அருளப்பட்டுள்ளன.
3ஆயிரம் பாடல்களும் கருங்கல்லில் பொறிக்கப்பட்டு, திருமந்திர அரண்மனையில் பதிக்கப்பட்டுள்ளது.
திருமந்திர அரண்மனை யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளையால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
திருமந்திர அரண்மனைத் திறப்பு விழா நிகழ்வில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுருக்கள், யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீன குருமுதல்வர், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எனப் பலரும் பங்கெடுத்தனர்.