ஒருநாள் பணிப்புறக்கணிப்பின் மூலம் எதனை சாதிக்கப்போகிறீர்கள்!



"வரியை நீக்கியமையால்தான் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டது, இதனால் தான் மீண்டும் வரியை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளோம்.

ஒருநாள் பணிப்புறக்கணிப்பின் மூலம் நீங்கள் எதனை சாதிக்கப்போகிறீர்கள்."

இவ்வாறு, இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அதிபர் ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.


"நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காளிகளாக உள்ள தொழிற்சங்கங்கள் தற்போது எதிர்க்கட்சிகளின் வலையில் சிக்கியுள்ளன.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள எமது நாடு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீட்சி கண்டு வருகின்றது, இந்தநிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதால் என்ன பலன் உங்களுக்கு கிடைக்கப்போகிறது.

நீக்கப்பட்ட வரி முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் தான் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடியும், மின்கட்டணத்தை அதிகரித்தால் தான் மின்சாரத்தை சீராக வழங்க முடியும்.


தற்போதைய சூழ்நிலையில் விலை உயர்வை தவிர்க்க முடியாது, எல்லாவற்றிற்கும் சர்வதேசத்தின் கையை எதிர்பார்ப்பதை விடுத்து, நாமும் சொந்தமாக எழுந்து நிற்க முயற்சிக்க வேண்டும்." இவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
புதியது பழையவை