மட்டக்களப்பில் தமிழர் பகுதியில் கால் நடைகளுக்கு நடந்த கொடூரமான செயல்!


மட்டக்களப்பு கிரான் பிரதேச எல்லைக்குட்பட்ட அக்குறாணை மூக்குறையான் குளம் வயல் பிரதேசத்தில் இரவு கால்நடைகள் அடைக்கப்பட்ட காலைகளுக்குள் உட்புகுந்த இனம் தெரியாதோர் கால்நடைகளை வெட்டியும் , கூரிய ஆயுதங்களால் தாக்கியும் கால்நடைகளை படுகொலை செய்துள்ளதாக பாற் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்று வந்த மாடுகளை காலைகளில் அடைத்து விட்டு , இரவு தங்கலுக்காக அயல்களில் உள்ள காவல் குடில்களுக்கு சென்று காலை வந்து பார்த்த போது இவ்வாறு மாடுகள் வெட்டியும் படுகொலைசெய்தும் காணப்பட்டது .

4 மாடுகளை இறைச்சிக்காக அறுத்து சென்றுள்ளதாகவும் இதனால் பொருளாதார ரீதியாக தங்கள் பின்னடைவினை சந்தித்து வருவதாகவும் பண்ணையாளர் தெரிவித்தார்.

அத்துடன் தாங்கள் இரவில் தனிமையில் பண்ணை காவல் குடில்களில் தூங்கினால் யானை தாக்குதலுக்கு இலக்காகுவதாகவும் அண்மையில் திகிலிவெட்டை,குடும்பிமலை பிரதேசங்களில் யானை தாக்குதல்களில் இரண்டு பேர் மரணமானதாகவும், இவ் அச்சம் காரணமாகதான் பல பண்ணையாளர்கள் ஒன்று சேர்ந்து இரவினை கழிப்பதாகவும் கவலை தெரிவித்தனர் .

இந்நிலையில் 4 மாடுகளை இறைச்சிக்காக அறுத்து சென்றுள்ளதாகவும் ஒரு மாடு வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவம் கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.



புதியது பழையவை