அரசாங்கத்திற்கு சொந்தமான பல நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கூடிய அமைச்சின் போது அரசாங்கத்திற்கு சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளை முழுமையான விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம், ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், Canville Holdings நிறுவனம், ஹோட்டல் டெவலப்மெண்ட் லங்கா நிறுவனம் (கொழும்பு ஹில்டன் ஹோட்டல்), லிற்றோ காஸ் நிறுவனம், லங்கா ஹொஸ்பிடல் கூட்டுத்தாபனம் பி.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.
அரசாங்க ஊழியர்களை குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனையை விதித்துள்ளது.
நிதியத்தின் முதற்கட்ட கடன்தொகை பெறப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.