உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் வெளியாகும்!


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(03) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி இன்று தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை ரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை