நீதியற்றுப்போன 18 ஆண்டுகளில் மாமனிதர் தராக்கி சிவராம்



நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். 

அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்

இந்த வார்த்தைகள் தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் இன்றுவரை ஈடுசெய்யப்படமுடியாத ஒரவராகவும் அதேநேரம் தமிழர் தேசத்தின் முன்வைத்து எண்ணப்படக்கூடிய ஒருவருமாகிய ஊடகவியலாளர் தராக்கி சிவராம்

தமிழினத்திற்காக உலகத்தின் வாசலகளை தட்டி நீதி கோரும் படலமாக மாற்றி ,தனது எழுத்துக்களால் தனித்துவமான தடம் ஒன்றை பதித்த மாமனிதர்.

தராக்கி சிவராம் அவர்கள் அவரது எழுத்துக்களால் அச்சம் கொண்ட உண்மைகளை சகிக்கமுடியாதவர்களின் கொலைக்குழல்களில் இருந்து வெளிவந்த சன்னங்களின் பசிக்கு இரையாகி இன்றோடு ஆண்டுகள் 18 ஆண்டுகள் நீதியற்று கடந்துபோகிறது.


மறைக்கப்பட்ட உண்மையின் பக்கங்களை மக்களின் மனங்களில் சேர்க்கும் உயர்தன்மைபொருந்திய மகோன்னதமான ஒப்பற்ற ஊடக வெளியில் தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் தனது கருத்துக்களை ஊடக வாயிலாக வெளிப்படுத்திவந்த சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி இனந்தெரியாத ஆயுததாரிகளால் ஶ்ரீலங்காவின் அது உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் .

துப்பாக்கியின் ரவைகளைக்காட்டிலும் கூரிய தனது பேனாமுனை எழுத்துக்களால் அன்றைய இனவாத அடக்குமுறைநோக்கங்கொண்ட பேரினவாத சிந்தனையாளர்களை அச்சங்கொள்ளச்செய்த சிவராம் தனது தனித்துவமான காத்திரம் மிக்க எழுத்துக்களாலும் அதனது ஆளுமைமிக்க பணிகளலும் ஈழத்தமிழர்களின் மனங்களில் ஒரு மாமனிதராக உயர்ந்த நிற்கும் எமது ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களை இன்றைய நாளில் நன்றிப்பெருமிதங்களோடு Battinatham news இணையத்தளம்  நினைவுகூருகின்றது.
புதியது பழையவை