26 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!நானுஓயா - கிளாசோ பிரதேச பாடசாலையில்  கல்வி கற்கும் மாணவர்கள் 26 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையால் இன்றையதினம்(28.04.2023) வழங்கப்பட்டுள்ள பகல் உணவின் காரணமாகவே குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


உணவு ஒவ்வாமை
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமையினால் மயக்கம், வயிற்றுவலி மற்றும் குமட்டல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட 26 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை