வெசாக் பண்டிகையை முன்னிட்டு - மதுபான கடைகள் பூட்டு!வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடப்படும்.

அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் அல்லது சில்லறை விற்பனை நிலையங்கள் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த காலப்பகுதியில் மூடத் தவறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
புதியது பழையவை