சூரியனில் பூமியை விடவும் 30 மடங்கு மிகப்பெரிய துளை!சூரியனில் 2வது முறையாக பூமியை விடவும் 30 மடங்கு மிகப்பெரிய துளை ஒன்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“கரோனல் துளை” என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல் மணிக்கு 1.8 மில்லியன் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருவதோடு அது வெள்ளிக்கிழமைக்குள் பூமியை அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரியனில் 2வது முறையாக பூமியை விடவும் 30 மடங்கு மிகப்பெரிய துளை! | 30 Times The Hole In The Sun For The Second Time

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாசா விஞ்ஞானிகள்,

இதனை தெற்காசிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உணரலாம்.

இந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் ரேடியோ தகவல் தொடர்புகள், விண்கலம், விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் மேலும், இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சூரிய புயல் பூமியில் செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விஞ்ஞானிகள் அவதானித்து வருகின்றனர்.

11 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே சூரியனில் ஏற்படும் மாறுதலுக்கு சூரியன் தயாராகி வருவதால், இந்தத் துளைகள் சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவன்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சூரியனில் இரண்டாவது துளை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை