கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் கடத்தப்பட்ட 3 மாணவிகள்!



கொழும்பு மாவட்டம் - பலாங்கொடை பகுதியிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 3 மாணவிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை விடுமுறை தினத்தன்று மாணவிகளை கடத்திய 3 இளைஞர்கள் அவர்களை குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மீட்கப்பட்ட மாணவிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பாலிகா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை