இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 46 ஆவது சிரார்த்த தினம் இன்று மட்டக்களப்பு நகரில்
அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அகிம்சை வழியில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறும் நோக்கில் பயணித்த தந்தை செல்வாவின் சிரார்த்த தின நிகழ்வுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேசக் கிளையின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்
உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
தந்தை செல்வாவின் நினைவுப் பகிர்வை இயேசு சபைத் துறவி அருட்தந்தை ஜோசப் மேரி நிகழ்த்தியதோடு மண்முனை வடக்கு பிரதேசக் கிளையின் செயலாளர் ஏ.சுகுமார்