குவைத்தில் இருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட 52 பேர்!குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து அந்நாட்டில் நீண்ட காலமாக வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின் தற்காலிக விமான அனுமதியின் கீழ் இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.


ஐந்தாவது குழு
இந்த வகையில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும்.


இவர்கள் இன்று (24) காலை 06.05 மணியளவில் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
புதியது பழையவை