மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு!மட்டக்களப்பு நகர், முனைவீதி 2ம் குறுக்கில் வீதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (24.04.2023) காலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியில் யாசகம் பெற்று வந்துள்ளதாகவும், அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

எனவே இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு காந்திபூங்காவின் முன்பாக உள்ள வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட் பெண் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதியது பழையவை