இது உலகப் புகழ்பெற்ற புலிட்சர் விருது பெற்ற புகைப்படம்



ஒரு சிறுமி, பஞ்சத்தின் காரணமாக எந்தவித உணவும் இல்லாமல், நடப்பதற்கு கூட முடியாத நிலையில் எலும்புகள் தெரியக்கூடிய அளவுக்கு சதையற்ற உருவத்தோடு இவள் குனிந்து அமர்ந்திருக்கிறாள். இவளுக்குப் பின்னால் ஒரு கழுகு எப்போது சாவாள் என இவளைக் கொத்திச் செல்வதற்காக காத்திருக்கிறது. 

1993 ஆம் ஆண்டுகளில் தெற்கு சூடானில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் சோக நிகழ்வுகளில் ஒன்று இது.

இந்த புகைப்படத்தை எடுத்தவர் கெவின் கார்ட்டர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் இந்தப் புகைப்படத்தை எடுத்ததற்காக உலகப் புகழ்பெற்ற "புலிட்சர்" விருதை வென்றவர், மட்டுமல்ல இந்த புகைப்படம் அந்த நாட்களில் உலகம் முழுவதும் பரபரப்பாகி சூடான் நாட்டு மக்களின் வறுமையின் கோரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு புலிட்சர் விருது பெற்ற  சில நாட்களில் ஒரு தொலைக்காட்சி சேனலில் இவர் பேட்டி கொடுக்கிறார் இப்போது அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் அவரிடம் கேட்டார்: 
அப்புறம் அந்தச் சிறுமிக்கு என்ன ஆனது ?

கெவின் பதிலளித்தார், 
"அந்தப் படம் எடுத்த உடனேயே எனக்கு அவசரமான விமானப் பயணம் இருந்ததால், அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய நான் காத்திருக்கவில்லை, என்று தன்னிச்சையாக பதிலளித்தார்.

பார்வையாளர் மீண்டும் சொன்னார்: 

நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்....
அன்று "இரண்டு கழுகுகள் இருந்தன, 

ஒரு கழுகு அதன் இரைக்காக காத்திருந்தது, 

மற்றொரு கழுகு கேமராவுடன் தனது புகைப்பட பசிக்காக காத்திருந்தது."

பட்டினியால் சாகப்போகும் அந்த சின்னஞ்சிறு பெண்குழந்தைக்கு இரண்டு ரொட்டி துண்டு கொடுக்காமல் அவள் இறப்பை எதிர்பார்த்து காமெராவை குறிபார்த்த மனிதாபிமானமில்லாத நீங்களும் ஒரு கழுகுதான்.

இந்த வார்த்தைகள் கெவினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
தவறு செய்து விட்டோம் என்ற உள் உறுத்தலின் காரணமாக மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானார் பிறகு தற்கொலை செய்து கொண்டார் என்று அப்பொழுது பரபரப்பாக செய்திகள் பேசின சிதைந்து போன மனிதநேயத்தின் ஓர் உருவமாகக் காட்சியளித்தார் கெவின். அப்போது அவர் வயது 33. 

பழைய படம், பழைய செய்தி என்றாலும் இப்போதும் புதிதாக நம் காலத்து ஊடகத்தினருக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் படம்.

இன்றைக்கும் இவர் போன்ற ஊடகத்தினர் நம் நாட்டில் கூட அதிகமாக இருக்கிறார்கள் மனிதநேயம், மனிதாபிமானம், இரக்கம், கருணை போன்ற அனைத்து பண்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கேமரா வழி பார்க்கக்கூடிய எல்லா காட்சிகளையும் சடலத்தை பார்ப்பது போன்ற உணர்வுடனே இவர்கள் பார்க்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதார நோக்கம் இல்லாத மனிதாபிமான உணர்வுடன் செயல்படும்  பொறுப்பு வர வேண்டும்.

ஊடகங்கள் மட்டுமல்ல நம் அனைவர் கையிலேயும் இப்போது அதே மன நிலையில் சுமார்ட் போன்கள் ...

வாசித்ததில் மனம்கலங்கியது..!

-பா.அரியநேத்திரன்-
புதியது பழையவை