ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை காதல் விவகாரம் ? ஆடைத் தொழிற்சாலை இழுத்து மூடிய முஸ்லீம் அமைப்புக்கள்!


மட்டக்களப்பு ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை பணியாற்றிய முஸ்லீம் யுவதி ஒருவரை அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தமிழ் இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிய ஏறாவூர் முஸ்லீம் அமைப்புக்கள் குறித்த ஆடைத் தொழிற்சாலை இழுத்து மூடியுள்ளனர். 

அமைச்சர் நசீர் அஹமட் அவர்களுக்கு சொந்தமான மேற்படி ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லீம் இளைஞர் யுவதிகள் பணியாற்றி வந்த நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் முஸ்லீம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து இந்துவாக மாற்றிவிட்டதாக கூறி குறித்த காதல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள சில முஸ்லீம் அமைப்புக்கள் ஆடைத் தொழிட்சாலையை மூடி உள்ளன. 

தனது ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டதாலும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஏனைய தமிழ் இளைஞர்களுக்கு எதிராக சில முஸ்லீம் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாளைய தினம் அமைச்சர் நசீர் அஹமட் ஏறாவூர் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதியது பழையவை