குரங்குகளை தொடர்ந்து மயில்களும் சீனாவுக்கு ஏற்றுமதி!


சீனாவுக்கு டோக் குரங்குகளை (toque monkeys) ஏற்றுமதி செய்யும் யோசனை குறித்து கருத்து தெரிவித்த ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முடிந்தால் குரங்குகளை மட்டுமல்ல மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

புத்தாண்டு விழா ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரங்கே பண்டார,

குரங்குகள் பயிர்களை நாசம் செய்வது மட்டுமன்றி மயில்களும் பயிர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

"சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட டோக் குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்ப்பவர்கள் வனாதவில்லுவை, ஆனமடுவ, அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தோட்டங்களுக்கு இந்த குரங்குகள் மற்றும் மயில்களால் ஏற்படும் சேதங்களைப் பார்த்து, விவசாய சமூகம் அனுபவிக்கும் இழப்பைக் காண வேண்டும்," என்று கூறினார்.

"சில அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் எப்போதுமே அரக்கர்களை உருவாக்குகிறார்கள், அரசாங்கம் ஏதாவது செய்ய முடிவு செய்யும் போது, இப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரக்கர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.
புதியது பழையவை