வவுனியாவில் கோர விபத்து - இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!வவுனியா நைனாமடு பகுதியில் நேற்று (16.05-2023) இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

நெடுங்கேணி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த செட்டிகுளம் கப்பாச்சியை சேர்ந்த 23 வயதுடைய ராமலிங்கம் அனுசன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.

குறித்த தம்பதியினர் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனத்தில் பின்புறமாக மோதுண்டு இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை