கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு!கதிர்காமம் - பழைய எழுமலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம்  இன்று (2) பிற்பகல் இடம்பெற்றுள்ளது, 

உந்துருளியில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர்கள் 
துப்பாக்கிச்சூட்டில்  46 வயதுடைய பிரதீப் லக்மால் என்ற 'உடவத்தே மஞ்சு' என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒரு கராத்தே ஆசிரியர் என்றும், சந்தேகநபர்கள் அவரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கால்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை