தமிழர்கள் இல்லாத நாட்டில் இலங்கையர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையாது - இரா.சாணக்கியன்வெடுக்குநாறி மலையிலே அரங்கறிய செயற்பாடுகளை வடக்கு மக்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள் எனவும் தமிழர்கள் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்ற எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது எனவும் தமிழரசுக்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்திருக்கிறார்.

வெடுக்குநாறிமலையில் இருந்த சிவலிங்கத்தை அகற்றியமையானது வடக்கு கிழக்கு மக்களின் கடுமையான கண்டனத்துக்குரியது என சுட்டிக்காட்டிய சாணக்கியன் இதனை எதிர்த்து மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை கருத்தில் எடுக்காமல் அவற்றை பற்றி சிந்திக்காமல் நாட்டினுடைய ஆட்சியாளர்கள் ஆட்சியை தொடர நினைப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல தற்பொழுது கொண்டுவரப்பட இருக்கும் புதிய சட்டம் ஆனது தற்போது இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட பல மடங்கு ஆபத்தான சட்டம் என சுட்டிக்காட்டிய சாணக்கியன் இது சர்வதேச அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சட்டம் என்ற போர்வையிலே ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையின் கீழ் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதேபோல பயங்கரவாத தடுப்புச் சட்டம் தேவை இல்லை எனவும் இது ஆபத்தானது எனவும் இது நீக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களிலும் கையெழுத்து போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் இந்த நாட்டினுடைய தலைவர்கள் திருந்தாவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை எனவும் தமிழர்கள் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்ற எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
புதியது பழையவை