தமிழ்ச் சைவப் பேரவை எடுத்துள்ள நடவடிக்கை!வெடுக்குநாறி, குருந்தூர்மலை ஆதி சிவன் கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்களுக்கான சட்ட நிபுணர் குழுவை தமிழ்ச் சைவப் பேரவை அமைத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்ச் சைவப் பேரவை நீதிபதியும் பேரவைத் தலைவருமான வசந்தசேனன் ஐயா தலைமையில் சட்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த வழக்குளுடன் தொடர்புடைய ஆலய நிர்வாகங்கள் மற்றும் சட்டதரணிகளுடன் தொடர்பிலுள்ளவர்கள் மேலதிக தகவல்களைப் பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம்.

அதேநேரம் தன்னார்வலர்களாக மேற்படி சட்ட நிபுணர் குழுவில் இணைய விரும்பும் நீதிபதிகள் சட்டத்தரணிகளை வரவேற்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை