இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது. 

இதேவேளை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை