குரங்குகள் உயிருடன் இருக்கும் போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்
மேலும் தெரிவிக்கையில், சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது.
இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை.
இந்த சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்திற்காக நம் நாட்டில் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது. வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது.
ஆனால், அரச அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருகிறது.
குரங்குகளுக்கான முன்பதிவு
அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான முன்பதிவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன.
எனவே, அவை இறுதி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும். இந்த குரங்குகளால் பயிர்களில் பெரும் பங்கு அழிந்து வருகிறது. எனினும் அவற்றை ஏற்றுமதி செய்வது அதற்கான தீர்வாகாது.
பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றை கேட்கத் தயாராக இல்லை.
பயிர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே முதலிடம் பெறுவார். எனவே, அவரையும் எங்காவது ஏற்றுமதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.