இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான தரம் வாய்ந்த ஆய்வு கூடம்!திருகோணமலை - கந்தளாய் பிதேசத்தில் இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான தரம் வாய்ந்த ஆய்வு கூடம் அமைப்பது தொடர்பாக சீன யுனான் மாகாண பிரதிநிதிகள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க தீர்மானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனான் மாகாணத்தின் வெளிநாட்டு உறவுகள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளார் நாயகத்திற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் அனூராதா யஹம்பத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், சேதன உற்பத்திப் பொருட்களின் தரத்தினை ஆய்வுசெய்து விதை ஆராய்ச்சிக்கு சர்தேச தரச்சான்றிதழ் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான சர்வதேச தரச் சான்றிழை வழங்கும் ஆய்வு கூடம் ஒன்று கட்டப்படுவது இதுவே முதற் தடவை ஆகும்.

யுனான் மாகாணத்தின் ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்குமிடையில் இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டதுடன் எதிர்வரும் மே மாத்தில் இதனை நிர்மாணிப்பதட்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இவ் உடன்படிக்கையின் பிரகாரம் ஆய்வு கூடத்தின் பணிகள் 02 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக மண், விதை, நீர் மற்றும் உரம் என்பன பரிசோதிக்கப்படும். இரண்டாவது கட்டமாக சர்வதேச தரச் சான்றிதழைப் பெறுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

யுனான் மாநிலத்திலிருந்து அதிகளவான முதலீட்டாளர்ளை கிழக்கு மாகாணத்திற்கு முதலீட்டுக்காக உள்ளீர்பதே இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி சூரிய சக்தி மற்றும் காற்றலை மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்தும் நீண்ட கலந்தரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில், யுனான் மாகாணத்தின் கல்வி, கிராமப்புற கைத்தொழில்கள், எரி சக்தி, நகரத் திட்டமிடல் , வணிகம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சீனப் பிரதிநிதிகள் கொண்ட சிறப்புக் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை