தாடியால் வாகனத்தை இழுத்து சாதனையாழ்ப்பாணம் - மட்டுவிலை சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது தாடியால் வாகனத்தை கட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளார்.

மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவரே இந்த சாதனை செயலை நிகழ்த்தியுள்ளார்.

நேற்றைய தினம் (10.04.2023) மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலையத்திலிருந்து பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் வரையான இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு அவர், தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.

இவர் சிறுவயதிலிருந்தே இவ்வாறு வாகனங்களை இழுத்து பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை