போதைப்பொருளுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!களுத்துறை காவல்துறை பயிற்சி கல்லூரியின் கான்ஸ்டபிள் ஒருவரை போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலையடுத்து அவசரகாலப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 56 வகையான போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை