வடக்கு கிழக்கு மாகாணங்களை பௌத்த மயமாக்க முயற்சி- கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு!



மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால், அகிலன் பவுண்டேசன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள
மாதிரிக்கிராமம் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வு இன்று (29-04-2023) அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


விசேட அதிதியாக இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தலைவரும் அகிலன் பவுண்டேசனின் ஸ்தாபகருமான மு.கோபாலகிருஸ்ணன்
கலந்துகொண்டார்.

வாழ்வாதார உதவிகள்,பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,வறியவர்களுக்கான அரிசிப்பொதிகள்,விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள்,மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டதுடன் கிராம மக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்திசெய்யும் வகையில் இரண்டு பொதுக்கிணறுகளும் திறந்துவைக்கப்பட்டன.

விவேகானந்தபுரம் பொதுநூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களும் வழங்கப்பட்டதுடன் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொள்ளப்பட்டது.


விவேகானந்தபுரம் கிராமமான போரதீவுப்பற்று பிரதேசத்தில் பின்தங்கிய பகுதியென அடையாளப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தினால் இந்தக் கிராமம் தெரிவுசெய்யப்பட்டு மாதிரிக்கிராமம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சசிகரன் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.



புதியது பழையவை