வனப்பகுதி ஒன்றில் காட்டு யானைக்கு வாழைப்பழத்தை காட்டி வெறுப்பேற்றிய பெண்ணை குறித்த காட்டு யானை முட்டித் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குறித்த காட்டு யானை தாக்கியதில் அந்தப் பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
மேலும் குறித்த பதிவில்,
புத்திசாலித்தனமான விலங்குகளான யானைகளை பழக்கினாலும் கூட ஏமாற்ற முடியாது என்று வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.