மக்களை முட்டாள்களாக்கிய யோகர்ட் நிறுவனம்!



அரசாங்கத்திற்கு சொந்தமான மில்கோ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் ஹைலேண்ட் யோகர்ட் லாபம் ஈட்டுவதற்காக அதன் எடையை 10 கிராம் குறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மக்களை தவறாக வழிநடத்தி நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்படுவதாக நுகர்வோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, ஒரு கோப்பை ஹைலேண்ட் யோகர்ட்டின் எடை 90 கிராம் என பதிவாகியிருந்தது. தற்போது யோகர்ட் கோப்பையை சிறியதாக மாற்றாமல் அடிப்பாகத்தை பெரிதாக்கி 10 கிராம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது ஒரு கப் ஹைலேண்ட் யோகர்ட்டில் 80 கிராம் தயிர் மட்டுமே உள்ளதென தெரியவந்துள்ளது.

இப்படி 10 கிராம் குறைப்பதன் மூலம் ஒரு கப் யோகர்ட்டில் சுமார் 11.50 ரூபாய் வரை நிறுவனம் இலாபம் ஈட்டுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை