அரச பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்!



கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாரவில - ஹொரகொல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மாரவில காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலால் பேருந்தின் முன்பக்கத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், குறித்த சம்பவத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
புதியது பழையவை