உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் கூட்டம்



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் நோக்கில் மீணடும் தேர்தல் ஆணைக்குழு கூட உள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழு விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதில் எதுவும் கிடைக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், எதிர்வரும் இரண்டு நாட்களில் பிரதமருடன் சந்திப்பு நடத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


எதிர்வரும் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
புதியது பழையவை