காதலியை நிர்வாணமாக்கி மிளகாய்பொடி வீசிய காதலன்



17 வயது காதலியை நிர்வாணமாக்கி அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடியை வீசி காயப்படுத்திய காதலனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை மாவட்ட நீதிபதி ஹேஷாந்த டி மெல் நேற்று உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில் 18 வயதுடைய சந்தேகநபரான காதலனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையேயான காதல் விவகாரம் இரு தரப்பினரின் பெற்றோருக்கும் தெரிந்திருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்,காதலியை மோட்டார் சைக்கிளில் நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையே பயணமொன்று தொடர்பான தகராறு ஏற்பட்டதையடுத்து, சந்தேகநபர் வீட்டின் சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடி போத்தலை எடுத்து, 'நீங்கள் ஒருபோதும் வர மாட்டீர்கள்' எனத் தெரிவித்து மிளகாய் பொடியை வீசியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை காவல் நிலைய பொறுப்பதிகாரி பி.ஓ.பி. என். பி. எஸ். ஜயலத், பிரதி காவல்துறை பரிசோதகர் எம். கே. ரமணி மற்றும் அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை