மட்டக்களப்பில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!மட்டக்களப்பு பிரதான தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (13.04.2023) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த இராசநாயகம் ரமேஸ்குமார் என்னும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலத்தினை உறவினர்கள் இன்று14 காலை அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.நீதிபதியின் பணிப்புரை
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரண விசாரணையை முன்னெடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை