பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
போலந்து நாட்டின் பிரஜையான 43 வயதுடைய பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொலன்னறுவை ஹத்தமுனாபாறை பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.