சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம்!



இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 

7.3 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதியது பழையவை