பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



பப்புவா நியூ கினியா பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு செபிக் மாகாணத்தில் உள்ள வெவாக் நகருக்கு தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் அமைந்துள்ளது.


இதேவேளை, நிலநடுக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கூட்டு அவுஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் (JATWC) தெரிவித்துள்ளது.

2022 இல் பாப்புவா நியூ கினியாவில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன்,,நிலச்சரிவுகள், சாலைகள் விரிசல் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை