இலங்கை முதல் தனுஷ்கோடி வரை நீந்திய பேராசிரியயை - மீனாட்சி பகுஜனா சாதனை!இலங்கை முதல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை 28கிமி தூரம் கடலில் டில்லி பேராசிரியயை மீனாட்சி பகுஜனா நீந்தி சாதனை படைத்துள்ளார்.

இவர் தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாரட்டுகிறார். நீச்சல் அகாடெமில் பயிற்சிபெற்ற இவர் ராமேஸ்வரம் முதல் தனுஷுக்கோடி வரை கடலில் நீந்தி கடக்க முயன்றுள்ளார்.

ஏப்ரல் 1ஆம் திகதி இரவு 10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்த துவங்கியுள்ளார்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். இச்சாதனையை இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் வரவேற்றுள்ளார்.
புதியது பழையவை