தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றுதேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு தேவையான நிதியை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கெடுப்பை 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
புதியது பழையவை