புத்தாண்டு சுபநேரப் பத்திரம் ஜனாதிபயிடம் கையளிப்பு!தமிழ், சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரம் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய முறைப்படி அதிபர் அலுவலகத்தில் நேற்று (03) அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்ட சுபநேரப் பத்திரத்தை, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அதிபரிடம் வழங்கி வைத்தார்.

வளர்பிறை தரிசனம், பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டுப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், சுப காரியங்களை ஆரம்பித்தல், கைவிசேடம் பெறுதல், உணவு உண்ணுதல், தலைக்கு மருத்துநீர் வைத்தல், தொழிலுக்காக புறப்படுதல், மரம் நடுதல் போன்ற சுப நேரங்கள் இதில் அடங்கும்.

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
புதியது பழையவை