மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்தொழில் மற்றும் ஏனைய மீன்பிடி துறையின் நிலைமைகள் குறித்து ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கடற்தொழில்,நீர்வேளாண்மைக்கூடாக நாட்டிற்கு வருமானத்தை பெறும் வகையில் உணவுப்பாதுகாப்பு, சுற்றுலாத்துறையினையு உள்ளகிய விசேட திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள்,மீனவ அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.


அத்துடன் இறாள் குஞ்சுகளை பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல் நிலைகள் குறித்தும் இறாள் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.
புதியது பழையவை