வாகரையிலிருந்து திருகோணமலை நோக்கி கடற்படையினரை ஏற்றிக்கொண்டு பயணித்த கடற்படைக்குச் சொந்தமான பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலினுள் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று கடற்படை வீரர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று(10) திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பட்டித்திடல் வாய்க்காலிலே இவ் பேரூந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.